திங்கள், 26 டிசம்பர், 2016

அனைவருக்கும் என் இனிய வணக்கம்.

என் பெயர் துரையரசன், க.

தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள சேங்கனூர் என்ற கிராமத்தில் பிறந்தேன்.

இவ்வூர் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் சோழபுரம் என்ற ஊருக்கும் திருப்பனந்தாள் என்ற ஊருக்கும் இடையில் உள்ளது.

சைவமும் வைணவமும் வளர்ந்த ஊர்.

63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேஸ்வர நாயனார் அவதாரத்தலம்.

திவ்ய பிரபந்தத்திற்கு 24000 படி உரை எழுதிய பெரியவாச்சான்பிள்ளை அவதாரத்தலம்.

இப்பொழுது சைவ, வைணவ நெறிகள் தழைக்கும்முகத்தான் பணியாற்றி வருகின்ற மாகாத்மா என்றும் அண்ணா என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற  ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி சுவாமிகள் அவதரித்து இறைத்தொண்டு ஆற்றிவருகின்றார்.

இத்தகைய சிறப்பு மிக்க இவ்வூரில் பிறந்த நான், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகக் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

இணையமும் இனிய தமிழும் என்ற நூலை 2009 இல் எழுதி வெளியிட்டேன்.
நான்கு முறை மறு அச்சு செய்யப்பட்டது இந்நூல்.

இப்பொழுது அதனைத் திருத்திய பதிப்பாகக்கூடுதல் செய்திகளோடு ஜனவரி 2017 இல் வெளியிட உள்ளேன். அதன் நினைவாக இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டது. இதில் தொடர்ந்து தமிழ் இலக்கிய, இலக்கண, ஆராய்ச்சிக்கட்டுரைகளும் இணையம் தொடர்பான செய்திகளும் வெளிவரும்.